6 Feb 2017

உடல் நலன் தரும் ஸ்வஸ்திக் கோலம்


உடல் நலன் தரும்

ஸ்வஸ்திக் கோலம்

                                                                                              
தெய்வசக்தியை ஈர்க்கும் ஆற்றல் கொண்டது.
எல்லா தெய்வங்களுக்கும் இது பொதுவானது.
விநாயகர், மகாலட்சுமி ஆகிய இருவருக்கும்
உரிய மங்கலச் சின்னமாக கருதப்படுகிறது.
திருமாலின் கையிலுள்ள சக்ராயுதம்
ஸ்வஸ்திக் வடிவில் இருக்கும்.
சூரியனின் சின்னமாகவும் கருதப்படும்.



செங்கோண வடிவில் மேலிருந்து கீழாகவும்,
இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கு ஒன்று
குறுக்கில் செல்லும் கோடுகள் இதில் இடம்
பெற்று இருக்கும். ஸ்வஸ்திக் என்பதற்கு
இடையூறு இல்லாதது என்று பொருள்.
யஜுர் வேதத்தில் இந்திரனைக் குறித்த
ஸ்லோகத்தில் ஸ்வஸ்திக் என்பது
தடையற்ற நல்வாழ்வு
என்னும் பொருளில் இடம் பெற்றுள்ளது.


வாசல் மற்றும் பூஜை அறையில்
ஸ்வஸ்திக் கோலமிட்டால் எட்டு திசைகளில்
இருந்தும் எந்த இடையூறும் நம்மைத்
தீண்டாது என்பது ஐதீகம்.
இதை வணங்கினால் உடல் நலம் மேம்படும்.
கண் திருஷ்டி போக்கும் பரிகாரமாக வீட்டில்
ஸ்வஸ்திக் வரையும் வழக்கம்
ஜெர்மனியில் இருந்தது.
-----------------------------------------
4 வகை விளக்குத் திரிகளும் அதன் பலன்களும்  

No comments:

Post a Comment